இந்நூலில் ஏழுகதைகளும் வெவ்வேறு நிலங்களில் வாழும் மாந்தர்கள் குறித்த கதைகள், கதை என்பது புனைவு. உண்மையைப் போன்ற புனைவு. அதேவேளை உண்மைகளை உணரவும் அறியவும் உதவக்கூடிய புனைவுகள். கதையாசிரியராக இருப்பது மிகவும் சிரமமான வேலை. நமது கற்பனையைவிடவும் வாழ்வு எல்லையற்ற விசித்திரங்களை வைத்திருக்கிறது. எழுத்தாளராகும் விழைவுடைய ஒருவர் தன் உடலைப் பிரிய வேண்டும். வெய்யிலோ, மழையோ, இருளோ, புயலோ, அவரது ஆன்மா இவ்வுலகின் மீது பறந்தவாறு இருக்கிறது. அவ்வான்மா ஒரு கதை எழுதி முடிக்கும்வரை இன்னொருவர் உடலில் வசிக்கத் தொடங்குகிறது. சௌந்தர்யம் கதையைப் படித்தவுடன் இந்து செல்லாவின் ஆன்மா என் உடலுக்குள்ளும் சிறிது காலம் வாழ்ந்திருக்குமோ? எனும் அய்யத்தை தோற்றுவித்தது.
-கரிகாலன்
Be the first to rate this book.