டானியல் ஜெயந்தன், வாழ்க்கை சார்ந்து என்ன புரிதலை வைத்திருக்கிறார் என்பதிலிருந்தே அவர் உருவாக்கும் புனைவின் உள்ளீடு அடர்த்திகொண்டு வெளிக்கொள்ளும் டானியல் ஜெயந்தனின் கதைகளை வாசித்து முடித்தவுடன், எது இத்தனை வேகமாகப் படிக்க வைக்க இயல்கின்றது என்று யோசித்துப் பார்த்தால், அவரது சித்தரிப்புகள் மிகுந்த நடை என்றே தோன்றுகின்றது.
மனிதர்களின் அசைவுகள் மீதான கூர்மையான அவதானங்கள் தேர்ந்த வாக்கியங்களுடன் ஒலிக்கின்றன. டானியல் ஜெயந்தனின் கதை மாந்தர்கள் கத்தோலிக்க இறைநம்பிக்கை படிந்த சிற்றூர்களில் இருந்து புலம்பெயர்ந்து பாரிஸ் தெருக்களில் உலாவும் சாமானியர்கள். அவர்களின் கற்பனைகளும், பகல் கனவுகளும் அவர்களின் பிறப்பிடங்களின் நினைவுகளுடன் தொடர்புடையது. சில நினைவுகள் பிரான்ஸ் போர்தோ ஒயினுடன் பிணைந்து வர்ணங்கள் கலவையாக மிகுந்த பிரான்ஸ் பட்டணங்களுடன் உலாவருகின்றன.
-அனோஜன் பாலகிருஷ்ணன்
Be the first to rate this book.