"மௌனங்கள் மொழியாக மாறும் தருணங்கள்தான்" பல கவிதைகளைப் பிரசவிக்கிறது. நான் சிறு வயது முதல் கிறுக்கிய வரிகள் இன்று ஒரு புத்தகமாக உருவெடுத்திருப்பதை எண்ணும்போது உள்ளார்ந்த மகிழ்ச்சியும், பெருமையும். இந்தப் புத்தகம் வெறும் கவிதைத் தொகுப்பு மட்டுமல்ல; என் பால்யத்தின் எச்சங்கள், பள்ளிப் பருவத்தின் பசுமை, பண்பட்ட காதல் மற்றும் வாழ்வியல் அனுபவங்களின் சங்கமம். வயக்காட்டு வரப்புகளில் சக்தியோடு ஓடிய கால்களும், களிமண்ணில் உருண்டு விளையாடியதும் இன்றும் என் கனவுகளில் மண்வாசனை வீசுகிறது. கிணற்றில் துள்ளி விழுந்து நீச்சலடித்த நினைவுகள் இன்று நினைத்தாலும் சாரல் நெஞ்சில் தெறிக்கிறது. தேங்கிய மழை நீரில் விட்ட காகிதக் கப்பல் இன்னும் நெஞ்சில் மிதந்து கொண்டே இருக்கிறது. வரப்போரத்துக் காற்றில் கலந்திருக்கும் ரகசியங்களைப் போல, இந்தப் பக்கங்களில் பல உணர்வுகள் புதைந்து கிடக்கின்றன. என் கவிதைகள் உங்கள் இதயத்தின் ஏதோ ஒரு மூலையைத் தொடும் என நம்புகிறேன்.
"நினைவுகளின் ஈரம் காய்வதேயில்லை..."
-லாரன்ஸ் செல்வம்
Be the first to rate this book.