மலையாள மண்ணில் புதிய தலைமுறையினரால் போற்றப்படும் பெண்ணிய எழுத்தாளர் திருமதி எம்.பி.மினி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எடத்தறா அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். 'வௌவால் வருஷம்' இவரது முதல் சிறுகதைத்தொகுப்பு.
மகாபாரதக் கதையை இடும்பியின் பார்வையில் விவரிக்கும் இவரது நான் இடும்பி என்ற புதினமும், அசோகச் சக்ரவர்த்தியின் காதலையும் போரையும் அழகாகச் சித்தரிக்கும் மகாமாகதம் என்ற வரலாற்றுப் புதினமும் மலையாள வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்கள். தகழி இலக்கிய விருது, கெ.என்.கோபாலபிள்ளை நாவல் விருது, சாகித்யஸ்ரீ விருது, வால்மீகி குருதட்சிணை விருது, வித்யாரம்பம் இலக்கிய மேடை விருது முதலான விருதுகளையும் மேலும் பல இலக்கியப் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.