கதாபாத்திரங்கள் யார். அவர்கள் என்ன உணர்கிறார்கள். எதற்காக என்ன மறைக்கிறார்கள். போராடுகிறார்கள் - இவை அனைத்தையும் உயிரோட்டமாக வெளிப்படுத்தும் திறன் உரையாடலுக்கு (வசனம்) உண்டு.
ஆனால் இயல்பாகவும், நுட்பமாகவும், காட்சியின் ஓட்டத்துடன் கலந்து ஒலிக்கும் உரையாடல்களை எழுதுவது அத்தனை எளிதல்ல. அந்தத் திறனை பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கவும், நடைமுறை உதாரணங்கள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம் உங்களுக்கு வழிகாட்டும் புத்தகம்தான் இது.
திரைப்படம். தொடர்கதை,மேடை நாடகம் அல்லது இணைய தளங்களுக்கான உள்ளடக்கம்-எதற்காக எழுதினாலும், உங்கள் உரையாடல்கள் உண்மையாகவும் தாக்கமுள்ளதாகவும் இருக்கவேண்டும் என்றால், இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் பயன்படும்.
திரைப்படத்தில் காட்சிகளில் நுட்பத்தோடும். கலை நயத்தோடும் உரையாடலை எழுத வேண்டுமென்றால்-இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் இருக்க வேண்டியது அவசியம்.
Be the first to rate this book.