நகரமயமாதலில் கட்டுண்டு கிடக்கும் நாம் நகர உருவாக்கம் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. பண்டைக் காலத்தில் ஊர் என்பது நீரும் வயலும் சூழ்ந்த இடமாகும். ஊர்களை உருவாக்குதல் என்பது சரியான நிலவியல் சூழல் பின்னணியோடு அமைவதாகும்.ஊரினுடைய நீடித்த ஆயுள், சமூக மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிப் படிநிலைகளை இச்சூழலே தீர்மானிக்கிறது. இதை மனதில் கொண்டே தமிழ் மன்னர்கள் புதிய ஊர்களை, நகரங்களை உருவாக்கினார்கள். அவ்வகையில் சரியான திட்டமிடுதலால் உருவாக்கப்பட்டும் ஆன்மீகம்,கல்வி, கலைகள், மொழி, இலக்கியம். வேளாண்மை உள்ளிட்ட குறையாத செழிப்போடு இருக்கக்கூடிய சிதம்பரம் நகரம் உருவாக்கம் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் ஏராளமான தரவுகளோடு எழுதப்பட்டிருக்கும் நூல் இது.
Be the first to rate this book.