நகரமயமாதலில் கட்டுண்டு கிடக்கும் நாம் நகர உருவாக்கம் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. பண்டைக் காலத்தில் ஊர் என்பது நீரும், வயலும் சூழ்ந்த இடமாகும். ஊர்களை உருவாக்குதல் என்பது சரியான நிலவியல் சூழல் பின்னணியோடு அமைவதாகும். ஊரினுடைய நீடித்த ஆயுள், சமூக மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிப் படிநிலைகளை இச்சூழலே தீர்மானிக்கிறது. இதை மனதில் கொண்டே தமிழ் மன்னர்கள் புதிய ஊர்களையும், புதிய நகரங்களையும் உருவாக்கினர். அவ்வகையில் சரியான திட்டமிடுதலோடு உருவாக்கப்பட்ட சிதம்பரம் சோழர் காலத்தில் ஆன்மிகம், இலக்கியம், மொழி, கல்வி, கவின் கலைகள், நகர நிர்வாகம், திருவிழாக்கள், வேளாண்மை உற்பத்தி உள்ளிட்ட குறையாத செழிப்போடு நீடித்து இருக்கக்கூடிய வகையில் இந்நகர் உருவாக்கம் பெற்ற வரலாற்றினை உரிய தரவுகளோடு எழுதப்பட்டிருக்கும் நூல் இது.
Be the first to rate this book.