‘வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்’ என்பது சிறுவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள சின்னச் சின்னக் கதைகள் ஆகும். சிறுவர் இலக்கியத்தில் விலங்குகள், பூச்சிகள், பறவைகளை வைத்துக் கதைகள் சொல்வது ஒரு மரபு. அந்த மரபு உதயசங்கரின் எழுத்துகளில் அழகும் புதுமையும் பெறுகிறது. இத்தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளும் புதிது புதிதான கற்பனைகளோடு எளிய மொழியில் உள்ளன என்பது சிறப்பு. சிறுவர்களின் மனஉலகோடு நெருக்கமான கதைகள் இவை என்று சொல்லலாம்.
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.