தமிழ்த் திரைப் பாடல்கள் வெறுமனே காதுகளுக்கு இன்பம் தரும் இசைத் துளிகள்மட்டுமில்லை, நம் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் துணை நிற்கிற, ஊக்குவிக்கிற, சிரிக்கவைத்துச் சிந்திக்கவைக்கிற, சீண்டிப் பார்க்கிற, அரவணைத்து ஆறுதல் கொடுக்கிற தோழர்கள். காலம் கடந்து, தலைமுறைகளைத் தாண்டி நம் மனத்தில் நீங்காத இடம் பிடித்திருக்கும் தமிழ்த் திரைப் பாடல்களைக் கொண்டாடும் புத்தகம் இது.
காதல், நட்பு, தத்துவம், துணிச்சல், ஏமாற்றம், நம்பிக்கை என வாழ்வின் அத்தனை வண்ணங்களையும் வரிகளுக்குள் பொதித்துத் தந்திருக்கிறார்கள் நம் திறமை மிக்க திரைக் கவிஞர்கள். அவற்றுள் சில பாடல்களை இந்தப் புத்தகம் நுட்பமாக ரசிக்கிறது, அவற்றின்மீது இன்னும் ஆழமான காதலை உண்டாக்குகிறது.
ஒரு கோப்பைத் தேநீருடன் அமர்ந்து இந்தப் பாடல்களை, அவை உருவாக்கும் உணர்ச்சிக் குவியல்களை ருசியுங்கள், இதுபோல் உங்களுக்குப் பிடித்த திரைப் பாடல்களை அசை போடுங்கள்!
Be the first to rate this book.