“சுதந்திரத்தின் எல்லையற்ற மகிழ்க்கியை எனது சக நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள நான் சுதந்திரமாக இருக்கிறேன். ஒரு காவியமான விடுதலைப் போராட்டத்தில் நமது சுதந்திரத்தை வென்றுள்ளோம்.”
பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிதாக உருவாகியுள்ள வங்காள தேசத்திர் கால் வைத்ததும் வங்க தேசப் புரட்சி விடிவெள்ளி ஷேக் முஜிபுர் ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் கூறிய வார்த்தைகள் இவை.
கிழக்கு வங்காளத்தை கிழக்கு பாகிஸ்தான் என மறு பெயரிடும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் திட்டத்தை முஜிபுர் ரஹ்மான் கடுமையாக எதிர்த்தார். வங்காளம் என்ற சொல்லுக்கு வரலாறும் தொன்மை மிக்க பாரம்பரியமும் உண்டு என்று முழங்கினார். அவர் ஒரு பிரிவினைவாதி என்றும் இந்தியாவின் முகவர் என்றும் இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியபோது இவர் மீது முத்திரை குத்தப்பட்டது.
சுதந்திர சுவாசத்தை வங்கதேச மக்கள் நீண்ட காலம் நிம்மதியாக அனுபவித்து விட முடியாதபடி முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக அவரது ஆட்சியைக் கலைக்க சதிப்புரட்சி நடக்கலாம் என்ற இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையைக் காற்றில் பறக்கவிட்டார் முஜிபுர் ரஹ்மான்.
விளைவு 1979 ஆகஸ்ட் 15 அன்று துரோக ராணுவ அதிகாரிகள் முஜிபுர் ரஹ்மான் உட்பட அவரது குடும்பத்தார் அனைவரையும் சுட்டுக் கொன்றனர். அவரின் ஐந்தாண்டு கால ஆட்சி வங்காள தேச வரலாற்றில் சோசலிசக் காலம் என்று கூறப்படுகிறது.
Be the first to rate this book.