இந்தப் புத்தகத்தில் இருக்கும் மூங்கிலைக் கொண்டாடிய குரங்குகள் கதையில் வரும் குரங்குகள் போலத்தான் ஒரு வகையில் நாம் இருக்கிறோம். இயற்கையின் அருமை புரியாமல், அழிக்கப் பார்க்கிறோம். உண்மையைப் புரியவைக்க பாண்டா கரடி போல ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டிதான் இந்தப் புத்தகம். குரங்குகள் புரிந்துகொண்டன... நாமும் புரிந்து கொள்வோம் வாருங்கள்!
- கே. யுவராஜன் (குழந்தைகள் எழுத்தாளர்)
சென்னைவாசியான கன்னிக்கோவில் இராஜா, தனியார் நிறுவனத்தில் நூல்களை வடிவமைத்து வருபவர். சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். 'குழந்தை இலக்கிய ரத்னா' உட்பட பல விருதுகளும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைசொல்லியாக இருக்கிறார். லாலிபாப் சிறுவர் உலகம் என்கிற அமைப்பை உருவாக்கி குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.
Be the first to rate this book.