17 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரையெழுதியிருக்கிறேன். காலங்காலமாய் இறுகிக்கிடந்த உரையைச் சற்றே நெகிழ்த்தியிருக்கிறேன். இளைஞர்களுக்காக இலகுமொழியில் உரையை நெய்திருக்கிறேன். திருக்குறளுக்கு உரையெழுதியதில் பிறப்பின் பெருங்கடமையொன்று நிறைவேறியதென்று நிறைவெய்துகிறேன். வள்ளுவர் என்ற பெருங்கடலில் துளியாய் வீழ்கிறேன் நானும் கடலாகிறேன்.
திருக்குறள் நிறைந்துவிட்டது. முப்பாலுக்கும் உரையெழுதி முடித்திருக்கிறேன். ஏழு முறை செப்பனிட்டுவிட்டேன். கணினித் தலைமுறைக்கான கனித்தமிழ் இது. ஈராயிரம் ஆண்டை இருபது வயதுக்கு எடுத்துச் செல்வது.
அறமும் பொருளும், ஞானப் பொருளாகவும் இன்பம் கவிதைப் பொருளாகவும் உரை செய்யப்பட்டிருப்பது பிறந்த பெருங்கடமைகளுள் ஒன்று நிறைவுற்றதாய் நெஞ்சமைதி கொள்கிறேன்.
திருக்குறளை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வோம்.
- வைரமுத்து
Be the first to rate this book.