ஸ்கந்தபுராணம் ஆரியர்களால் கடத்தப்பட்ட, குன்று தோறும் குடியிருந்த குமரனின் குசும்புக்கதை. இந்த வள்ளியின் புராணமோ சுத்தமான தனித் தமிழ்க் கதை. வள்ளியை ஆரியர்களால் தொட முடியவில்லை. அவர்கள் தொட விரும்பவுமில்லை. வள்ளி நம்ம தங்கச்சி. முருகன் நம்ம மச்சினன். காவடிகள் நம்ம படையல். அலகு நம்ம நேர்ச்சை. வேல் அவனது படை வெற்றி அவனது படைவீடு.
மயில் வாகனன், சேவல் கொடியன், பாம்பு பகைவன். தேனும் தினை மாவும் திகட்டாமல் தந்தவள் வள்ளி. தமிழக நாட்டுப்புறங்களில் வள்ளித் தாலாட்டு, வள்ளித் திருமணம், வள்ளிக் கும்மி, வள்ளிக் கூத்து, வள்ளிக் கதைகள் என வள்ளி புராணம் வளர்ந்த வண்ணம் இருக்கிறது. இது நமக்கான ஆய்வு.
-காவ்யா சண்முகசுந்தரம்
Be the first to rate this book.