அந்த மகான் நம்மோடு இன்னமும் வாழ்கின்றார் என்னும் நினைப்பு, நமக்கு அளவற்ற ஆற்றலைத் தருவதாகும். அதனால், இராமலிங்கர் நம்முடைய உயிரிலே. உணர்விலே கலந்து வாழ்கின்றார் என்று நினைப்போமாக!
அடிகள் மறையுங்கால். 'இனி நான் எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்: என்று கூறினாரே, அதன்படி அவர் நம்மில் ஒவ்வொருவர் உடலையும் கோயிலாகக் கொண்டு வாழ்கிறார் என்று நம்புவது. நாம் இகந்தே பரத்தைப் பெற்று வாழ்வதற்கான வழியாகும்.
மரணமிலாப் பெருவாழ்வு ஒன்று உண்டென்று நம்பி அதற்காக முயல்வோமானால் மரணத்தை ஒத்திப்போடும். ஆற்றலையேனும் பெறுவதோடு, மீண்டும் பிறவாத பேரின் பத்தையும் அடைவோம். அதனால், மரணமிலாப் பெரு வாழ்வினை நம்பி. அதனைப் போதித்த பெருமானைப் போற்றுவோமாக
Be the first to rate this book.