தமிழ் இலக்கியத்தில் கருப்பொருளாகச் சித்திரிக்கப்பட்ட யானையை இந்நாவல் உரிப்பொருளாக்கியுள்ளது.
மனிதர்களைப்போல் உயிரும் உணர்வும் உறவுகளுமுடைய கதைமாந்தர்களாக யானைகள் இந்நாவலில் உலாவுகின்றன. கானுயிர்களான யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவிடாத போராட்டத்தை எடுத்துரைக்கும் இந்நாவலில் நாவலாசிரியர் யானையின் பக்கம் நிற்கிறார். யானையின் பூர்வீக பூமியைக் கைப்பற்ற, கபளீகரம் செய்ய மனிதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதுதான் இந்நாவல் உணர்த்தும் அறமாகும். இயற்கை நிலவெளியைப் பின்புலமாகக் கொண்டுள்ள தாடு மட்டுமல்லாமல் கானுயிரழிவு, காடழிப்பு முதலான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவதால் வலசை ஒரு சூழலிய நாவலாகத் திகழ்கிறது.
பா.ஆனந்தகுமார்
Be the first to rate this book.