நான் உலகைச் சற்றே உற்று கவனித்தேன். துக்கத்தின் நிழல் அதில் படிந்திருப்பதைப் பார்த்தேன். துன்ப நெருப்பில் அது சுட்டு வாட்டி எடுக்கப்படுவதையும் பார்த்தேன். அதற்கான காரணத்தைத் தேடினேன். என்னைச் சுற்றியுள்ள புற உலகத்தில் தேடினேன். ஆனால், காண முடியவில்லை. புத்தகங்களில் தேடினேன், ஆனால் காண முடியவில்லை. என்னுள் தேடினேன், அதற்கான காரணத்தையும் அந்த மூலகாரணங்களை உருவாக்கிய சுயத்தின் கூறுகளையும் கண்டேன். என்னுள் நான் மீண்டும் ஆழ்ந்து தேடினேன். அவற்றுக்கான தீர்வையும் கண்டேன்.
நான் ஒரு நீதி நெறியை கண்டேன், அது தான் அன்பின் நீதிநெறி. ஒரு வாழ்வைக் கண்டேன். அந்த நீதிநெறிக்கு உட்பட்டு வாழும் ஒரு வாழ்வு. அந்த வாழ்வு என்பது உண்மைக்கு கட்டுப்படும் மனம், கீழ்ப்படியும் இதயம் என கண்டேன். ஆணோ அல்லது பெண்ணோ, ஏழையோ அல்லது பணக்காரனோ, படித்தவனோ அல்லது படிக்காதவனோ, உலகப்பற்று உள்ளவனோ அல்லது உலகப்பற்று அறுத்தவனோ-, எவராக இருப்பினும் சரி, அவர்களது எல்லா வெற்றிக்கும், எல்லா மகிழ்ச்சிக்கும், எல்லா சாதனைக்கும், எல்லா உண்மைக்குமான மூல காரணத்தை தம்முள்ளே காண்பதற்கு உதவும் ஒரு நூலை எழுத வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவு என்னில் தங்கி இறுதியில் நிறைவேறியது. இப்போது, நான் அதை விடை கொடுத்து உலகிற்கு அனுப்பி வைக்கிறேன்-, ஆறுதலையும் பேரருளையும் கொண்டு சேர்க்கும் இலக்கோடு, அதனை காத்திருந்து வரவேற்போர் இல்லங்களையும் இதயங்களையும் சென்றடைவதில் அது தோல்வியுறாது என்று அறிவேன்.
-ஜேம்ஸ் ஆலன்
Be the first to rate this book.