ஒவ்வொரு மனிதத்திற்குள்ளும் ஒரு மனக்கிடங்கு இருக்கிறது. அந்தக் கிடங்கிற்குள் மிருகம், விஷமி. பறவை பட்சிகள் தூங்குகின்றன. பசுத் தூக்கம், புலித் தூக்கம், செந்நாய்த் தூக்கம், பாம்புத் தூக்கம், கரடித் தூக்கம், பருந்துத் தூக்கம், ஆமைத் தூக்கம், கழுகுத் தூக்கம். இப்படியாக. மிருக விஷமிப் பட்சிகள் விழிக்கையில் மனிதத்திற்கும் பின்னே இவை நடைபோட வேண்டும், மனிதத்தைப் பின்னுக்குத் தள்ளி இவை முன்னே நடந்தால் நீர்க்கோள் என்னாகும், உயிர்த்துவம் எந்நிலை எய்யும் எனச் சொல்ல வருவதே வேங்குடி வயல், மொழியாலும் வடிவாலும் இந்நாவல் தமிழுக்குப் புதுவரவு.
இயற்பெயர் க.இராஜமாணிக்கம் கந்தர்வகோட்டை வட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சிறுகதை, புதினம். கட்டுரை. மாவட்ட வரலாறு சொல்லாய்வு என்று பல்துறைகளில் இலக்கியப் பங்களிப்பு செய்துவருகிறார். இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் வந்து புதினங்கள் மூன்று குறும்புதினங்கள் உட்பட இருபந்து ஐந்து நூல்கள் எழுதியுள்ளார். இவரது பிராண நிறக் கனவு எனும் சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை விருதும் அன்னமழகி எனும் நாவல் எழுத்து-திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு வழங்கும் ரூபாய் இரண்டு இலட்சங்கள் பரிசும் பெற்றன. மேலும் இவர் பல இலக்கிய அமைப்புகளால் விருதும் பரிசும் பெற்றவர்.
புதுக்கோட்டையை மையமாகக் கொண்டு தொடர் நூல்கள் கெயண்டு வருகிறார். புதுக்கோட்டை பன்றி நாடு முதல் புதுகை வரை (பாகம்-1) எனும் மாவட்ட வரலாறு நூலைத் தொடர்ந்து புதுகை வட்டார சொல்லகராதி எனும் நூல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளிவந்தது அண்டனூர் சுரா சிறுகதைகள் 100' எனும் க்கு தொகுப்புகள் 2004 முதல் 2024 வரையிலான சிறுகதைகளின் தொகுப்பாகம்
Be the first to rate this book.