உலகளாவிய அரசியலில் வட கொரியா எனும் இந்நூலானது தெளிவான இலக்குடனும் திட்டமிடலுடன் நகரும் தேசம் பற்றியதும், அத்தேசத்தின் தலைமைத்துவத்தின் உபாயங்கள் பற்றியதுமாக மட்டும் அமையவில்லை. ஒட்டு மொத்தமான வட கொரிய மக்களது பண்பாடும் மரபுகளும் சமூகத் தன்மைகளும் ஒன்று சேர்ந்த இயங்கியல் நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வட கொரியா என்பது வெறும் நாட்டுக்கான அடையாளம் கிடையாது. அதனையும் கடந்து தேசமாகவும் சமூகமாகவும் அனைத்து எதிர்ப்புகளையும் கடந்து செயல்படுகின்ற தேசியம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த இந்நூல் விழைகிறது. மிகச்சிறிய நாடு, மிகச் சிறிய மக்கள் கூட்டம் அதிக நெருக்கடிகளை எல்லாம் கடந்து நிலைத்திருக்க முடியும் என்ற படிப்பினையைத் தந்துள்ளது.
Be the first to rate this book.