மாதவன் கட்டுரைகளின் உள்ளடக்கம் நெஞ்சை அள்ளுகிறது என்றால் அவற்றின் வடிவ நேர்த்தியிலும் மனம் திளைக்கிறது. ஓர் உரைநடைக் கவிதையைப் படித்தது போன்ற மன நிறைவை அவரது வசீகர நடை நம்மிடம் தோற்றுவிக்கிறது. எடுத்தால் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பு இவரது எழுத்தின் பொதுவான சிறப்பம்சம்...
ஜென் கதை, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், சாக்ரடீஸ், முகமது நபி, புத்தர், அரிஸ்டாட்டில் உள்ளிட்ட பலரது வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற பலவற்றை நூலாசிரியர் தகுந்த பொருத்தமான இடங்களில் எடுத்தாள்கிறார். ஒரு கருத்தை வலியுறுத்துவதற்கு இத்தகைய சம்பவங்களைத் தேர்வு செய்ததில் நூலாசிரியரின் உழைப்பு தெரிகிறது
- முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்
ஆசிரியர், அமுதசுரபி இதழ்
Be the first to rate this book.