பணக்காரர்களாகத் தாங்கள் ஆதிகாலத்தில் அடி நாட்களிலிருந்து இப்போது ஏழைகள் ஆகிவிட்டவர்கள் என்பதை இவர்கள் மனத்தில் வைப்பதில்லை. எப்போதும் போலவே இப்பொழுதும் வாழ்க்கைத் தரத்தில் சிறிதும் நலியாதவர்கள்போல் மெலியாதவர்கள்போல் நடப்பவர்கள். அப்படித் தாங்கள் பாவித்து நடந்து கொண்டால் மற்றவர்களும் அப்படியே பாவித்துத் தங்களை அப்படியே மதித்து நடத்தி விடுவார்கள் என்று எண்ணுகிறார்கள். எப்படியோ தரம் மாறாமலே தங்கள் வாழ்வு நடந்துவிடும் என்று எண்ணுகிறார்கள்: உலகை ஏமாற்ற எண்ணி ஆரம்பித்துத் தாமே ஏமாந்து போகிறார்கள் அறிவிலிகள்! ஒவ்வொரு தடவையும் அவர்கள் மண்டையில் தட்டி அறிவுறுத்த வேண்டியதாக இருக்கிறது அவர்களுடைய இன்றைய நிலைமையை!
-க.நா.சுப்ரமண்யம்
Be the first to rate this book.