வாழ என்னும் நாவல் ஒரு புறம் புனைவாக இருந்தாலும் இன்னொரு புறம் அபுனைவாகவே இருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பது, இருபது என மூன்று நூற்றாண்டுகளிலும் நடந்த வரலாற்றுச் செய்திகளை, உண்மைச் சம்பவங்களை வைத்து ஒரு கதையை புனைந்து தந்துள்ளார். சுத்த சரிதத்துடன் சுயசரிதமும் சிறிதளவு கலந்துள்ளது. நாவல் எழுதுவதில் வெற்றிப் பெற்றிருந்தாலும் தன் மொழியில், தன் தாய் மொழியில், தான் பேசி வளர்ந்த மொழியில், தான் கேட்டு வளர்ந்த மொழியில் தன் வட்டார மொழியில் எழுத வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. ஆசிரியர் அழகுபாண்டி அரசப்பன் புலம் பெயர்ந்து திருப்பூரில் வசித்தாலும் அவருக்குள் அவர் வாழ்ந்த மண்ணும் பேசிய மொழியும் புலம்பெயராமல் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
~பொன்.குமார்
Be the first to rate this book.