மாணவர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு பேரியக்கமாகத் தீவிரத்தோடு செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இது காலத்தின் கட்டாயம். ஏன் களத்தில் செயல்பட வேண்டும். அங்கு சூழலை எப்படி உருவாக்குவது. வாசிக்க வைப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன, எப்படி அவற்றை எதிர்கொள்வது, யாரெல்லாம் முன்னெடுப்பது. அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் என்னென்ன... உட்பட ஒரு பெரிய திட்டத்தின் முன் வரைவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
புத்தக வாசிப்பை இன்றியமையாத ஒரு செயல்பாடாக இளைய சமூகத்தின் மத்தியில் மாற்ற வேண்டும். இதை அறிவார்ந்த சமூகத்தில் இயங்குகிற ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமையாகக் கருதுகிறோம். இந்த முன் வரைவை வாசிக்கவும் இயன்றவர்கள் செயல்படுத்தவும் அன்புடன் அழைக்கிறோம். வழிநெடுகத் துணையாகவும் நிற்போம்.
-விழியன் | விஷ்ணுபுரம் சரவணன்
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.