வாசிப்பதில் விதிவிலக்கு. எல்லா இலக்கிய வகைமை களையும் வாசிக்கிறார். நாடும் மொழியும் அவருக்குத் தடையாக இல்லை. இந்நூலின் மிகப்பெரிய பலமாக இருப்பது அந்த வெர்ஸடைலிட்டியே.
விஜயலெட்சுமி ஒரு எலிப்பொறியில் தேங்காயைச் சுட்டு வைப்பதுபோல, ஒரு கதையைப்பற்றி எவ்வளவு சொன்னால், எப்படிச் சொன்னால் மூல நூலைத் தேடிப்பிடித்து வாசிப்பார்களோ அவ்வளவுதான் சொல்கிறார். அவருடைய நடையும் 'பழகி நீர்க்கும் சித்திரவதை' போன்ற அபூர்வமான சொல்லாட்சியும் நம்முடைய வாசிப்பை ஊக்குவிக்கின்றன.
வாசிப்பிற்குள் புதிதாக நுழைபவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியின் வேலையைச் செய்யக்கூடும். அதுதான் இந்தப் புத்தகத்தின் அவதார நோக்கமாகவும் இருக்கமுடியும்.
-எழுத்தாளர் செல்வேந்திரன்
மேடை நாடகக்கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிப்புப் பயிற்சியாளர், துணை இயக்குனர், திரைப்பட வசனகர்த்தா, குறும்பட இயக்குனர், இயக்குனர், கதைசொல்லி, சிறுகதை எழுத்தாளர் எனப் பன்முகத் திறனராகத் திகழும் ரெ.விஜயலெட்சுமி ஒரு தீவிர வாசிப்பாளரும்கூட. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' என்னும் தொடரின் கதாபாத்திரங்கள் இவர் எழுதும் வசனங்களைப் பேசுகிறார்கள்.
தேன்கூடு என்ற யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் சேனல் வழியாக சுமார் 200க்கும் மேற்பட்ட இலக்கியம் சார்ந்த நூல்கள் குறித்த அறிமுகத்தை, காணொளிப் பதிவுகளாக வெளியிட்டு தீவிர வாசகர்களுக்கு அவற்றை அறிமுகம் செய்வதோடு, எழுத்தாளர் களையும் பெருமைப்படுத்தி பெருமைப்படுக்கி வருகிறார்.
Be the first to rate this book.