முதலும்முடிவுமாக ஓர் இலக்கியப் படைப்புஎன்பது எதைத் தனக்கான ஆதார சக்தியாகக் கொண்டுநிலை நிற்கிறது என்று பார்த்தால், அது தனக்கேயான ஒருதனித்த மொழியைக் கண்டடைந்து கொள்வதில்தான் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். சமூகப் போராளி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (1941-2022) தனது இலக்கியப் படைப்பிற்கானஇந்தத் தனித்த மொழி எனும் மூலப்பொருளைத்தனது மண் சார்ந்த வட்டாரத்துமக்களின் வாய்மொழியில் இருந்தும் உடல் அசைப்புக்களில் இருந்தும்பண்பாட்டு வழக்காறுகளிலிருந்தும் மண் தரும் விளைச்சல்களில்இருந்தும் அழுகை, சிரிப்பு, கோபம் முதலிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் இருந்தும் தோண்டி வடிவமைத்துள்ளார்.
Be the first to rate this book.