சடகோ சசாகியின் நினைவாக ஆயிரம் ஓரிகாமி கொக்குகளைக் காகிதத்தில் செய்கிறார்கள் மாணவர்கள். அந்தக் காகிததக் கொக்குகள் பறக்க ஆசைப்படுகின்றன. அந்தக் கொக்குகள் வானத்தில் பறக்க மாணவர்கள் முயற்சி செய்ய விரும்பின. அவை பறந்ததா? இல்லையா? கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னைவாசியான கன்னிக்கோவில் இராஜா, தனியார் நிறுவனத்தில் நூல்களை வடிவமைத்து வருபவர். சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். 'குழந்தை இலக்கிய ரத்னா' உட்பட பல விருதுகளும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைசொல்லியாக இருக்கிறார். லாலிபாப் சிறுவர் உலகம் என்கிற அமைப்பை உருவாக்கி குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.
Be the first to rate this book.