தான் பெற்ற இன்பம் பிறரும் பெற வேண்டும் என்று நினைப்பது உயர்ந்த உள்ளம் தான் பெற்ற கலை அறிவு பிறரும் பெற வேண்டும் என்று நினைப்பது அந்தக் கலையின் மீது காதல் கொண்ட உள்ளம்.
இயக்குனர் கே.பாக்யராஜ் தன் திரைப்பட அனுபவங்களை, வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை அமைத்த பின்னணிகளை அதற்குப் பயன்படுத்திய சூட்சுமங்களை இந்தப் புத்தகத்தில் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
உடன் பணிபுரிபவர்களுக்கே வித்தையை சரிவரக் கற்றுக் கொடுக்காத பலர் இருக்கையில் வாசிக்கும் எவருக்கும் தெரியட்டும் என்று தான் கற்றதைச் சொல்வது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.
தன் தோல்விப் படங்களையும் அலசி எங்கே தவறு செய்தேன் என்று உணர்ந்ததையும் வெளிப்படையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது புத்தகம் அல்ல. திரைக்கதை வித்தைகள் சுமந்த பெட்டகம்! திரைப்படக் கல்லூரிகளில் வைக்கப்பட வேண்டிய பாடம்! திரைப்பட ஆர்வலர்களுக்கு அரிய பொக்கிஷம்!
வாசிப்பவர்கள் தங்கள் திரைக்கதை அறிவின் எடையில் சில கிலோக்கள் கூடியதை உணர்வார்கள். நான் உணர்ந்தேன்..
-எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்
Be the first to rate this book.