’வாண்டுமாமா’ என்று கடந்த 68 ஆண்டுகளாக அறியப்பட்ட திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான் தமிழ் சிறுவர் இலக்கியத்தின் தலைமகனாவார். தமிழில் சிறுவர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் நேரமொதுக்கி எழுதியவர்கள் விகாரம் குறைவே. அப்படிப்பட்டவர்களில் முதன்மையானவர் வாண்டுமாமா. இவரை, ’சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி’ என்று சொல்வது பொருத்தமான ஒன்றே.
வாண்டுமாமாவின் சிறப்பு: படிப்பவர்களை சுண்டி இழுக்கும் வசீகரம் கொண்டது வாண்டுமாமா அவர்களின் எழுத்து நடை. சூரியனுக்கு கீழே உள்ள எதைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதிப் படிக்கும்படியாகச் செய்தவர் அவர். விஞ்ஞானம் என்றாலே காத தூரம் ஓடிக்கொண்டிருந்த பலரையும் விஞ்ஞான சம்பவங்களை ரசித்துப் படிக்க வைத்தவர் அவர். இவர் எழுதிய உலோகங்களின் கதை, நகரங்களின் கதை, தோன்றியது எப்படி, நாகரிகங்கள் உருவான வரலாறு போன்ற பல புத்தகங்கள் பாடப் புத்தகங்களை எளிமையாக மாணவர்களுக்குப் போதித்தன. மற்றவர்கள் அனைவருமே படைப்பாளிகளாக, ஒளியர்களாக. எடிட்டர்களாக தனித்திறமையுடன் செயல்பட்டபோது, தனது வாழ்நாள் முழுவதிலும் சிறுவர் இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அம்மாமனிதர் ஓர் ஆல்-ரவுண்டராக ஒளிவீசினார்.
Be the first to rate this book.