"இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொண்ட திரு.கே.ஆர்.என்.மனோஜ் திருப்பூரை சேர்ந்த இளைஞர் மெக்கானிக் என்ஜினியரிங்கில் எம்.டெக் முடித்திருக்கிறார் அதே சமயம் எலக்ட்ரிகல் பிரிவிலும் பரிச்சயம் மிக்கவர். இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக் சயின்ஸ் துறையில் ஸ்பெஷலிஸ்ட் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். CADD ட்ரெய்னர் தொழிலதிபர். கலை இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்."
ஆதலையூர் சூரியகுமார் தமிழகம் அறிந்த எழுத்தாளர். குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், தினமலர் தினமணி என்று அத்தனை பத்திரிகைகளும் நடத்திய சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசுகளை அள்ளி குவித்தவர். தனது படைப்பில் ஏதாவது ஒரு சமூக சிந்தனை இருக்க வேண்டும் என்ற கவனத்தோடு எழுதிவருபவர்.
இதோ 'வானம் தேடும் வானம்பாடிகள் என்ற இந்த நாவலில் கல்லூரியில் பயிலும் சமூக சிந்தனை கொண்ட ஒரு மாணவன், அதே சிந்தனையோடு அந்த கல்லூரியில் சேரும் ஒரு மாணவி அவர்களிடையே உருவாகும் நட்பு. எப்படி அந்த கல்லூரியின் அடையாளத்தை அழகாக மாற்றுகிறது என்று விவரிக்கிறார். கல்லூரி மாணவர்களின் ஆற்றலையும் சக்தியையும் உயர்த்திப் பிடிக்கிற ஒரு கதை அத்துடன் காதலும் சேர்ந்து கொண்டால் களைகட்டும் தானே!
"இந்தப் புந்தகம் வெளிவருவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொண்ட திரு.கே.ஆர்.என்.மனோஜ் திருப்பூரை சேர்ந்த இளைஞர். மெக்கானிக் என்ஜினியரிங்கில் எம்.டெக் முடித்திருக்கிறார் அதே சமயம் எலக்ட்ரிகல் பிரிவிலும் பரிச்சயம் மிக்கவர். இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக் சயின்ஸ துறையில் ஸ்பெஷலிஸ்ட் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கள் விக்கும் வேலை வாய்ப்புக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் CADD ட்ரெய்னர், தொழிலதிபர் கலை இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்"
Be the first to rate this book.