வேள்பாரி வாசகர் மன்றம் வாசகப் பரப்பி னூடே தோழமையை மலரச்செய்து படர்கிறது. செயலும் சிந்தனையும் ஆக்கமும் ஊக்கம் பெறும் களமாக வாசகர் மன்றம் வினையாற்றுகிறது. இம்மன்றம் மூலமாக இணைந்த வாசகர்கள் பறம்பு பாட்டாபிறை குழுவின்மூலம் படைப்பாளி களைக் கண்டறிந்து அவர்களின் படைப்பு களை நூல்களாக வெளியிட்டுப் புதிய துவக்கங்களை உருவாக்குகின்றனர்.
-எழுத்தாளர் சு. வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர்
லாஸ்யாவின் கவிதைகளில் காதலின்பம் ஆறேழு கவிதைகளோடு முடிந்துவிடுகிறது. உச்சிக் கிளையில் கட்டிய தேன்கூடாய் அது எங்கோ இருந்து மயக்குகிறது. அதை அடையும் பிரயத்தனங்களில் இருக்கும் நிராசை, போதாமை, எதிர்பார்ப்பு ஆகியவையே மீதிக் கவிதைகள். அதிகபட்சமாக லாஸ்யாவின் கவிதைகள் வேண்டுவது அனுசரணை யான வார்த்தைகள்தான். அசலான நுட்பமான உணர்வுகளைக் கையாளு வதால் இத்தொகுப்பு தனித்துவம் பெறுகிறது.
-எழுத்தாளர் ஆர். நீலா, மாநிலத் துணைத் தலைவர், தமுஎகச
லாஸ்யாவின் கவிதைகளின் மொழி சக பெண்களின் மெல்லிய குரல், இயற்கையின் சத்தமில்லா முணங்கல், எளிய உயிர்களின் உரிமைக் குரல். இவரது படைப்புகளைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு வாழ்க்கையின் சாரம் வசப்படும்.
-பா. திருப்பதி வாசகன்
Be the first to rate this book.