திருமிகு. பாலகிருஷ்ணன் (IAS Rtd)
ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதற்கென்று தேவையான, சிறப்புவாய்ந்த மேற்கோள்களுடன் ஒரு கதையும் இடம்பெற்றிருக்கின்றன. பெரும் இன்னல்களுக்கு நடுவில் வாகை சூடிய மனிதர்களின் வாழ்க்கை அளிக்கும் முன்னுதாரணங்கள், படிப்பினைகள் மற்றவர்களுக்கான வினையூக்கியாக மாறுகின்றன.
திருமிகு. ப.சிவகாமி (IAS Rtd.)
இந்நூலை பயில்பவர்கள் நிச்சயமாக குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்பதினால் இந்நூலை அனைவருக்கும் பரிந்துரை செய்ய விழைகின்றேன்.
எழுத்தாளர் திருமிகு எஸ். ராமகிருஷ்ணன்
இனிய நண்பர் தா. முருகராஜ் IFS குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற 21 ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். இவை போட்டித் தேர்வில் வெல்வதற்கான ஆலோசனைகள் மட்டுமில்லை. உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும் உதவக்கூடியது.
திருமிகு. பேராசிரியர். இளங்கோ
சுயத்தை இழக்காமல் தனி அடையாளத்தைத் தக்கவைத்து முயற்சி செய்வோர் மட்டுமே வெற்றி காண முடியும் என்பதை இந்நூல் முழுக்கத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே போகிறார் முருகராஜ். குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றிக்கான அடிநாதமே இது தான் என்பதை வெற்றி பெற்றோரின் பயணத்தின் ஊடாக நான் கண்டிருக்கிறேன்.
மருத்துவர் திருமிகு. அமலோற்பவநாதன்
இந்த நூல் உங்கள் தூக்கத்தைக் கெடுத்துவிடும். இது திருக்குறளைப்போல் சுருக்கமாக ஆனால் ஆழமாக எழுதப்பட்டுள்ளது. வாசிக்கும் எவருக்கும் உற்சாகம் குறையாத ஒரு துள்ளல் நடையில், "உன்னால் முடியும் தம்பி’ என்று தட்டி எழுப்பும் மாயப் பிரம்பு இந்நூல்.
Be the first to rate this book.