தமிழ்த் திரையுலக வரலாற்றிலும், தமிழ்ப் பத்திரிகையுலக வரலாற்றிலும் அழிக்க முடியாத இடத்தைப்பிடித்த பெயர் திரு எஸ்.எஸ்.வாசன் என்பது. அவ்விரண்டு துறைகளிலும் அவர் அழுத்தமான தனது முத்திரையைப் பதித்தார். ஆனந்த விகடன் என்ற தரமான வாரஇதழும், இரட்டைக் குழல் ஊதும் குழந்தைகள் முத்திரையுடன் கூடிய ஜெமினி திரைப்படப் படப் பிடிப்புத் தளமும் அதன் மூலம் அவர் தயாரித்தளித்த ஔவையார் போன்ற திரைப்படங்களும் அவர் பெயரை பறைசாற்றிக் கொண்டேயிருக்கும். அவைகளை அவர் உருவாக்கியதன் வரலாறே அவரது சலியாத உழைப்புக்கு உதாரணம்.
Be the first to rate this book.