இயற்கையைக் காக்க வேண்டிய அரசாங்கங்கள் பெயரளவில் பேசிவிட்டு காடழிப்பிலும் இயற்கைச் சீர்கேட்டிலும் முனைப்பாக ஈடுபடுகின்றன. இப்புவியைக் காக்க வேறு ஒரு தேவதூதன் வரப்போவதில்லை. நாமேதான் அந்த தேவதூதர்கள். இந்நூலில் அருமையான 15 கட்டுரைகளை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். சாதாரணர்கள்தான் இயற்கையைக் காக்கக் குரல் கொடுக்கிறார்கள். அவ்வகையில் இந்த சாதாரணனும் தன் பங்களிப்பாக இந்நூலை நமக்களித்திருக்கிறார்.
-சி. பத்ரசாமி
மேனாள் மாவட்ட வன அலுவலர்.
கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி வட்டம் அரங்கபாளையம் என்னும் அமராவதி நதிக்கரை யோரச் சின்னஞ்சிறு கிராமத்தில் 1971-ல் பிறந்தவர் சாதாரணன். இவரது இயற்பெயர் வீ.கௌதமன். 1995-ல் இடைநிலை ஆசிரியப் பணியேற்றார். பிரேமா இவரது வாழ்க்கைத் துணைவி. ஆதிரை மற்றும் விசாகன் இவர்களது குழந்தைகள், தற்போது பட்டதாரி ஆசிரியராக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார்.
கணித ஆசிரியராக இருப்பினும் தமிழ் இலக்கி யத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சிலபல கவிதை களும் ஒருசில சிறுகதைகளும் எழுதியுள்ளார். இயற்கையின் மீதும் அது சார்ந்த செயல்பாடுகள் மீதும் பற்றுக் கொண்டவர். தொடர்ந்த வாசிப்பு பழக்கம் உள்ளவர்.
Be the first to rate this book.