தமிழ்ச் சிறுகதை உலகுக்கு பங்களிப்பு செய்து கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களில் உதயசங்கரும் ஒருவர்.அவருடைய நாற்பதாண்டு கால கதையுலகம் தமிழ்ச் சிறுகதை நிலப்பரப்பின் மாற்றங்களைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
இந்தத் தொகுப்பை வாங்கி வாசிப்பதன் மூலம் தமிழ்ச் சிறுகதையின் மற்றுமொரு முகத்தை வாசகர்கள் அறிந்துகொள்ள முடியும்.அந்த முகம் தங்கள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர்ந்து கொண்டாடுவார்கள்.
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.