காதல் எனது பழக்கங்களைப் பறித்துக் கொண்டு கவிதையால் என்னை நிரம்பி வழியச் செய்தது என்றான் ரூமி. சுரேஷ் அவர்களின் கவிதைகளில் காதல் நிரம்பி வழிகிறது. அழகை, தாகத்தை, ஏக்கத்தை, பிரிவை, உறவை எனக் காதலின் எல்லாப் பரிமாணங்களையும் தன் கவிதைகளில் காட்டியுள்ளார் கவிஞர். கவிதையில் முரண் எப்போதுமே அழகு! எந்த ஒரு விஷயத்திலும் முரண் ஏற்படும்போதுதான் ஒரு புதிய கண்டுபிடிப்போ, தத்துவமோ, புரட்சியோ, மாற்றமோ நிகழ்கிறது. அந்த வகையில், அமைதியையே அறியாத கடலையும் அலையையும் ஏன் நாடுகிறது அமைதியைத் தேடும் மனம் என்றொரு அற்புதமான முரணை நம் கண்முன் வைக்கும் கவிஞருக்கு ஒரு சபாஷ்.
* பித்தன் வெங்கட்ராஜ்
Be the first to rate this book.