இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலங்களில் நிகழ்பவை. தகுந்த மொழி அமைப்பையும் வார்ப்பையும் நேர்த்தியையும் கொண்டவை. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் மனிதர்களின் போக்குகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. பால்ய காலச் சித்திரங்களாக அமைந்த சில கதைகளுடன் காலந்தோறும் உருமாறும் பெண்களின் இருப்பை பகுத்துக்காட்டும் கதைகளே மிகுதியும் உள்ளன. அரை நூற்றாண்டு காலமாய் கவிதை, கட்டுரை, நாவல் என எழுதித் தோய்ந்த சுகுமாரனின் அனுபவமும் ஆளுமையும் இச்சிறுகதைகளில் துலக்கமாகத் தடம் பதித்திருக்கின்றன.
Be the first to rate this book.