வாழ்க்கை ஒரு புதிர்! சுற்பனையில் நினைக்காதைக் கூட நிகழ்த்திக் காட்டும். சிலரை களிப்பூட்டும்; சிலரை கவலையில் ஆழ்த்தும்! சிலரைப் பலவானாக்கும். சிலரை நோயில் வீழ்த்தும்! தீராத நோயினிடையேயும் நாளை வாழ்வேன் என நம்பிக்கையோடு செயலாற்றவும் தூண்டும்! வாழ்க்கையின் மகிமையை சொல்லி முடியாது. இப்புதிரான வாழ்வைத் திட்டமிட்டு வாழ்வோரும் உண்டு, திட்டமின்றி அதன் போக்கில் வாழ்ந்து கழிப்போரும் உண்டு.
இப்படியான வாழ்கையினூடே வாழ்ந்து சகமனிதர் களோடு ஊடாடி, உறவாடி உற்ற அனுபவங்களை, கற்ற பாடங்களை, கண்டவற்றை, கேட்டவற்றை காண விரும்பியதை மறுபடைப்பாக்கி, நான் தருவதே இத்தொகுப்பில் உள்ள கதைகள்.
ஜனநேசன்
Be the first to rate this book.