ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும், தன் மொழியை அனைத்து விதமான நவீன பயன்பாட்டுச் சாதனங்களுக்குள்ளும் எடுத்துச் சென்று, அவற்றில் பொருந்தச் செய்வதையே தன் பணியாக மேற்கொள்வது அபூர்வம். அதைச் செய்துவரும் முத்து நெடுமாறன் கணித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவர். இன்றைக்கு ஆயிரக்கணக்கான தமிழ் எழுத்துருக்கள் வந்திருக்கலாம். எல்லாம் தொடங்கி வேகமெடுக்க ஆரம்பித்த புள்ளி, முத்து நெடுமாறனின் முரசு அஞ்சல். இன்றைக்கு இணையம் வழியே தமிழில் உரையாடும் அத்தனை பேரின் கரங்களிலும் அவர் இருக்கிறார். அவர் உருவாக்கிய முரசு அஞ்சலோ, செல்லினமோ, தமிழ் சங்கம் எம்மென்னோ, இணைமதியோ, இன்னொன்றோ இல்லாமல் நமக்கு ஒருநாளும் விடிவதில்லை. திறன்பேசித் தலைமுறைக்கும் தடையற்ற தமிழ் கிடைக்கக் காரணமாக இருந்தவர், இருப்பவர் முத்து நெடுமாறன். அவருடைய வாழ்க்கைக் கதையான இந்த நூல், கணினித் தமிழின் கதையும்தான்.
Be the first to rate this book.