விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர்நலன் மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருக்கின்ற மாண்புமிகு உதயநிதி தம் அயராத உழைப்பால் மக்கள் மனத்தில் இதயநிதியாகக் காட்சியளிக்கின்றார் என்பதை அறியலாம். ஓயாத உழைப்பாளியாகவும் பயன்கருதா தொண்டராகவும் விளங்குகின்றார். கடுமையான மழையினால் ஊருக்குள் வெள்ளம் நிறைந்த போது தன்னலத்தை எண்ணாமல் தாமே களத்தில் இறங்கி சாதாரண பணியாளர்போல் பணியை ஆற்றி வந்தார். இதனைக் கண்டது முதல் அமைச்சர் உதயநிதியின் உழைப்பை, பெருமைகளை உலகம் அறியச் செய்ய வேண்டும் என்று உந்துதல் பெற்றேன்.
ஏற்கெனவே இவர் பற்றிய 'மக்கள் நாயகன் உதயநிதி' என்றும் 'தரணி போற்றும் உதயநிதி' என்றும் இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டிருந்தேன். நாளெல்லாம் புதிய திட்டங்கள் அறிவித்து மக்கள் நலன் பேணும் அரசாக இருக்கின்ற 'திராவிட மாடல்' அரசின் திட்டங்கள் செயல்படும் முறையை நேரில் ஆய்வு செய்யும் பணியையும் இவர் தம் விளையாட்டுத் துறையுடன் பார்த்து வருகின்றார் என்பதுடன் எளிமையுடன் அன்புடன் எப்போதும் சிரித்த முகத்துடன் பழகி வருகிறார்.
Be the first to rate this book.