அடர்த்தியான, வேகம் மிக்க கூற்றுச் சரடுகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து எழுதப்பட்டுள்ள ஹல்லாபோல், ஒரே சமயத்தில் பல பொருண்மைகளைத் தருகிறது. சப்தர் ஹஷ்மி குறித்த தெளிவான நினைவுக் குறிப்பான இந்நூல், உழைக்கும் வர்க்க அரசியலுக்கும், பண்பாட்டுச் செயல்முறைக்கும் இடையே உள்ள ஊடாட்டங்களை அதன் மையத்தில் வாழும் வாழ்க்கைகளோடு காட்டுகிறது. நாடகங்கள் உருவாக்கம் குறித்த நுண்ணிய தகவல்களோடு அவை தெருமுனைகளில் நிகழ்த்தப்பட்ட பான்மையும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஈர்ப்பு மிக்க நடையே ஒரு அருமையான நாடகம் போல விரிகிறது. வாசகனைக் கட்டிப் போடும் நூல். – மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அஹ்மத்
Be the first to rate this book.