அமிர்த சித்தர்
வெள்ளை காகம்
வெள்ளை யானை
வெள்ளை நாகமுள்ள
கானகத்தில் அண்டவெளி சித்தர்
வெள்ளை கல்லெடுத்து வெளிச்ச மரத்தில்
தட்டத்தட்ட சுரந்தது பால் அமிர்தம் பருகி
வெண்மேகங்களிடையே பறந்த படி
ககன சித்தன் தொலை தூரத்தில்.
நூற்றாண்டுகள் பலவாய் அந்த
தேக்கிலையில் வடிந்தபடியே பால்.
அந்த வழியே வந்த கானகத்து விறகு
வெட்டி தொட்டு தொட்டு நாக்கில் தடவி
பொய்கையிலிருந்து பொங்கி
எழுந்து வரும் புதையல்
தேவதைக்காக காத்திருந்தபடி.
Be the first to rate this book.