நம் நாடு சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி, அனைவருக்குமான ஒரு நாடாக ஒன்றுபட்டு நிற்கிறது. பல்வேறு மதத்தவரும், ஒன்றுபட்டு வாழும் இந்நாட்டில், சில மனிதர் மதங்களையும், சாதிகளையும் காட்டி, தங்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட குழலில், வெவ்வேறு மதத்தினர், சாதியினர் காதல் கொள்வது என்பது அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா? இக் கேள்விக்கான பதில், சற்றுக் கடினம்தான். இக்கடினமான கேள்விக்குப் பதில், வன்முறையினால் காதல் பிரிக்கப்படுவதாகவும் இருக்கலாம் அல்லது ஓடிச் சென்ற யாரும் அறியாமல் வாழ்வதாகவும் இருக்கலாம். இவை இரண்டும் இன்றி, அந்த மதம்பிடித்தவர்கள், இருவரையும் ஏற்று காதலை வாழவைப்பது என்பதும் நடக்கும், சிலநேரங்களில்.
உன்னோடு நான் என்னும் இக்குறும் புதினம், வெவ்வேறு மதம் சார்ந்த இருவரும் வாழ்வில் ஒன்றிணைகிறார்களா? என்பதை முன்னிறுத்தியது. இம்நாவலின் ஆசிரியர் பாத்திமா பைலஸ் மனதின் குரலை மெண்மையாக ஒலிக்க விட்டு, அதேவேளை, ஒரு தீமையைக் கண்டால் கொதித்தெழும் போக்கோடு அழகாக்கி கொண்டு சென்றுள்ளார் இந்நாவலை.
Be the first to rate this book.