உண்மை கலந்த நாட்குறிப்புகள்

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

1 rating(s)
204 ₹240 (15% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: அ.முத்துலிங்கம்
Publisher: உயிர்மை பதிப்பகம்
No. of pages: 287
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788189912949
Book Format: Paperback
Category: நாவல்
Subject: பிற

Description

தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 
1 rating(s)
5
0
4
1
3
0
2
0
1
0

4 excellent

“நாவலைப் பாதி எழுதி முடித்தபோது, எங்கே உண்மை விடைபெறுகிறது, எங்கே கற்பனை நுழைகிறது என்பதில் எனக்கே சந்தேகம் தோன்றிவிட்டது ” என்று அ.முத்துலிங்கம் இந்த நாவல் பற்றி அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இலங்கை , கொக்குவில் கிராமத்தில் ‘ரயிலை வைத்து மணி சொன்ன நாளில்’ இருந்து தனது அனுபவங்களை, நினைவுகளை கோர்வையாக 46 அத்தியாயங்களில் இந்த நூலில் எழுதியிருக்கிறார் அ.முத்துலிங்கம். கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த எழுத்தாளரான அ.முத்துலிங்கம் தனது அனுபவங்களை அவ்வப்போது குறிப்புகளாக எழுதி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இது நாவல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இதனை நாவல் என்றே நாம் ஒப்புக்கொள்ளுவோம்.2008 ஆம் ஆண்டு தனது முதல் பதிப்பை இந்த நூல் கண்டுள்ளது. ஊர்திருவிழாவில் தன் அம்மாவைத் தொலைத்த கதையில் தொடங்கும் இந்த நூல் , தன் ‘அக்காவின் சங்கீத சிட்சை’, தான் ‘பாடகன் ஆன கதை’ என பள்ளிக்காலம்,கல்லூரிக் காலம், உத்தியோக காலம்,சந்தித்த கதாபாத்திரங்கள் என 46 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளது. அ.முத்துலிங்கத்தின் வழக்கமான நடை; அதே எள்ளல், மெல்லிய நகைச்சுவை, ஆழம் என எல்லாமும் உண்டு. ஆனால் இதை நாம் கதை என்று சொல்ல முடியாது. எந்த அத்தியாயத்திலிருந்தும் படிக்கலாம்.’ இந்த நாவலில் இருப்பது அத்தனையும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டுபிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் ” என்ற பொறுப்புத் துறப்போடு(disclaim) இந்த நூல் தொடங்குகிறது. நான் அ.முத்துலிங்கத்தின் தீவிர ரசிகன். இந்த நூலும் எந்த வஞ்சனையும் இல்லாமல் இருக்கிறது. இதில் உள்ள பல வாக்கியங்களை நான் அடிக்கோடிட்டு ரசித்துச் சிரித்தேன். அம்மாவுடன், அய்யாவுடன், அக்காவுடன், தங்கையுடன், மனைவியுடன், பேத்தியுடன் அவருக்கு உள்ள நினைவுகளின் கோவையே இந்த நூல். ஐ.நா.வில் பணிபுரிந்த போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா போன்ற பல நாடுகளுக்குச் சென்று இருக்கிறார். பல மனிதர்களை பார்த்து இருக்கிறார். இதில் கதை என்று ஏதும் இல்லாததால் விறுவிறுப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசிக்கக் கூடிய ஏகப்பட்ட சம்பவங்கள் உண்டு. ‘உருப்படமாட்டாய்’ என்று சொன்ன ஆசிரியர் சொன்ன கட்டடத்தின் முன் சிறுநீர் கழித்த கண்ணதாசன், காதலியை சைக்கிளில் துரத்திய மதியாபரணம், 14 சமையல் புத்தகத்திலும் இல்லாத வட்டிலப்பம், தமிழ் ஈழத்தின் வரைபடத்தை ஒரு வரியில் பத்திரிக்கையாளர்களுக்குச் சொன்ன கேர்ணல் கிட்டு, ‘நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள். சரி எனக்கு எப்போது ஓய்வு?’ என்று அவர் மனைவி கேட்ட கேள்வி போன்ற துணுக்குகள் மூலம் அ.முத்துலிங்கத்தின் ஜனநாயக பார்வையை, அரசியலை நாம் அவதானிக்க முடியும். மொத்தத்தில் துணுக்குத் தோரணங்களைக் கொண்ட நூல் இது. உயிர்மை பதிப்பகம்/ 287 பக்கம்/ரூ.240/இரண்டாம் பதிப்பு 2014. பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். த டைம்ஸ் தமிழில் தன் வாசித்த நூல்கள், ரசித்த சினிமாக்கள் குறித்து சமூக செயல்பாட்டாளர்களை நேர்கண்டும் எழுதி வருகிறார். published in thetimestamil.com on 15.12.2018

peter durairaj 21-12-2018 03:01 pm
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp