உண்டி முதற்றே உணவின் பிண்டம்", "உணவே மருந்து" என்பவை தமிழர் மருத்துவ அறிவியலில் அடிப்படை பார்வையாகும்.
"உணவே மருந்து" என்ற இந்நூலில் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை தமிழ்ச்சான்றோர்கள் சொல்லிச் சென்றுள்ள உணவு சார்ந்த மருத்தவக் கோட்பாடைத் தெளிவாக விளக்குகிறார்.
காலம், இடம், அளவு போன்றவற்றைப் பொறுத்து நாம் உட்கொள்ளும் உணவே நோய் ஆக்கியாகவும், நோய் நீக்கியாகவும் செயல்படுவதை சான்றோர் கூற்றுகளின் அடிப்படையில் மிக நுணுக்கமாக எடுத்துக் கூறுகிறார் நூலாசிரியர்.
இன்று புதுமை, பகுத்தறிவு என்ற பெயர்களால் மேற்கத்திய உணவுப் பழக்கங்கள் திணிக்கப்பட்டு, இளம் வயதிலேயே தமிழர்கள் பல நோய்களுக்கு ஆளாகிவரும் சூழலில், நமது உணவு மரபு குறித்த அறிவியல் உண்மைகளை இளையோருக்கு வழங்குவது எமது நீங்காக் கடமை எனக் கருதியே "பன்மைவெளி" இந்நூலை வெளியிடுகிறது.
Be the first to rate this book.