இப்போதெல்லாம்
என் பாதையிலும்
பூக்கள் பூக்கத் துவங்கி விட்டன
மரங்களும் அவற்றின்
கிளைநிழல்களிலும் அணில்கள்
குதித்தோடுகின்றன
காலையில் பறவைகளின்
ஒலி கேட்கத்துவங்கிவிட்டன சோலையிலும்
மயில்கள் அகவுகின்றன சாலையில்
பாதிக்கும் மேற்பட்ட
சிக்னல்களில் பச்சையே விழுகிறது.
நினைத்த அணி
கோப்பை வெல்கிறது
நிற்கும் வரிசையோ
விரைந்து நகர்கிறது
அலைபேசி சூடாகி ஹேங் ஆவதில்லை
பேட்டரியில் சார்ஜ் தீருவதில்லை
தாளங்களுடன் நாட்டியமுமாய்
கலைகளும் கூத்துகளும் காணக்கிடைக்கின்றன
நல்ல கவிதைகள்
கண்ணில் படுகின்றன
இவற்றையெல்லாம் உன் வருகைக்கான
நற்குறிகளாகக் கொண்டு நீ வந்து
சேர்ந்து விட்டால் போதும்
குறையொன்றுமில்லையென பாடத்
துவங்கி விடலாம்.
Be the first to rate this book.