மனிதகுலத்தின் பண்பாடு மற்றும் பொருளாதார அடித்தளம் மாறும்போது, காதலும் மாறும். காதலின் மதிப்புமிக்க அம்சங்களும் கூறுகளும் வளரும். வாழ்க்கைத் துணையினுடைய ஆளுமையின் உரிமைக்கான மரியாதை அதிகரிக்கும். மேலும் பரஸ்பர உணர்திறன் கற்றுக் கொள்ளப்படும்; ஆண்களும் பெண்களும் தங்கள் காதலை முத்தங்களிலும், அரவணைப்புகளில் மட்டுமல்ல, கூட்டுப் படைப்பாற்றலிலும், செயல்பாட்டிலும் வெளிப்படுத்த பாடுபடுவார்கள். பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தின் பணி சமூக வாழ்க்கையிலிருந்து சிற்றின்பக் காதலை விரட்டுவது அல்ல, மாறாக புதிய சமூக உருவாக்கத்திற்கு ஏற்ப காதலை மீண்டும் ஆயுதபாணியாக்குவதும், தோழமை ஒற்றுமையின் புதிய உளவியல் சக்தியின் உணர்வில் பாலியல் உறவுகளைப் பயிற்றுவிப்பதும் ஆகும்.
-அலெக்ஸாண்ட்ரா கொலொண்டாய்
Be the first to rate this book.