இயற்கையாகத் தோன்றிய மலைகளும், பாறைகளும், பள்ளத்தாக்குகளும் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத பல ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன.
நம் புரிதலில் உள்ள குழப்பத்தால் புவியீர்ப்புக்கு நேரெதிராக காட்சியளிக்கும் காந்த மலை, இயற்கை இழைத்த பிழையால் கண்கொள்ளாக் காட்சியாக மாறிய இயற்கை வளைவு, சிற்பியால் அல்ல, இயற்கையால் செதுக்கப்பட்ட உலகக்கோப்பை வடிவிலான பாறை என இந்நூலில் பேசப்படும் பலவிதமான நிலப்பரப்புகள் வாசிக்கும்போதே சிலிர்ப்பை உண்டாக்கக் கூடியவை. ‘வானவில் மலைகள்’, ‘ஏழு வண்ணங்களின் மலை’ பற்றி அடுத்தடுத்து வாசிக்க நேரும்போது இயற்கையில் இத்தனை அதிசயங்களா என்கிற ஆச்சரியம் மென்மேலும் மேலோங்குகிறது.
ஒவ்வொரு இடம் பற்றிய விவரிப்பின் மூலம் அந்தப் பகுதியை தத்ரூபமாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ.
Be the first to rate this book.