இன்றைய இளைஞர்கள், உலக சினிமா பற்றி முன்பைக் காட்டிலும் பரவலாக அறிந்திருக்கிறார்கள். திரைப்படத் திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று உலகத் திரைப்படங்களைக் கண்டுகளிக்கிறார்கள். இந்த மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் இந்திய தமிழ் சினிமாகர்த்தாக்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. உலகத் திரைப்படங்களைப் பற்றி அவர்கள் பேசும் போதும், எழுதும்போதும், யாவரும் அந்தப் படங்களை எளிதாக உணர முடிகிறது; புரிந்துகொள்ள முடிகிறது; தூரதேசத்து மக்களின் கலை _ பண்பாட்டை அறியவேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் எழுகிறது.
விரைவாக வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சியிலும், நம்முடைய அண்டை நாட்டு மக்களின் கலாசார, பாரம்பரியமான வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்வதற்குக்கூட பலர் மெனக்கெடுவது இல்லை. ஆனால், உலகத் திரைப்படங்கள் அதையும் எளிதாக்குகின்றன. உலகத் திரைப்படங்கள் பற்றி, ஆனந்த விகடன் இதழ்களில் ஒளிப்பதிவாளர் செழியன் ‘உலக சினிமா’ என்ற பெயரில் தொடராக எழுதியது, பல்வேறு தரப்பினரின் கவனத்தை மிகவும் கவர்ந்தது.
செழியன்
திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர்.
கணையாழியின் சிறந்த சிறுகதை விருது. (2003) சிறந்த சிறுகதைக்காக 'கதா விருது (2004) சிறுகதையில் காட்சிப்படிமங்கள் என்ற ஆய்வுககாக மத்திய அரசின் ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது (2004). பரதேசி படத்துக்காக இலண்டனிலும், (2013) டுலெட் படத்துக்காக இத்தாலியிலும் (2018) சர்வதேச அளவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது. டுலெட் படத்துக்காக கொல்கத்தா திரைப்படவிழாவில் சிறந்த இந்தியப் படத்துக்கான விருது. (2018) சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றவர்.
சத்யஜித் ரேயின் முதல் படமான பதேர் பாஞ்சாலி. கடைசிப் படமான அந்தக் திரைக்கதைகளின் மொழிபெயர்ப்பு, உலக சினிமா, பேசும் படம்,முகங்களின் திரைப்படம். ஒளியில் எழுதுதல், டுலெட் திரைக்கதையும் உருவாக்கமும், ஹார்மோனியம் சிறுகதைத் தொகுதி, 'த மியூசிக் ஸ்கூல் என்ற பெயரில் மேற்கத்திய இசை குறித்த பத்துத் தொகை நூல்களின் ஆசிரியர், 'த பிலிம் ஸ்கூல என்ற பெயரில் ஒரு பள்ளியைத் துவங்கி இன்டிபெண்டண்ட் சினிமாவுக்கான கலையையும் நுட்பங்களையும் சுற்றுத் தருபவர்.
ஆனந்த விகடனில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'வந்த நாள் முதல்' என்கிற இந்தக் காதல் கவிதைத் தொடரின் ஆசிரியர்.
Be the first to rate this book.