கன்னியாகுமரியில் ஐயன் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க 1975ம் ஆண்டு சிலை நிறுவப்பட்டு, 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்படும் நிகழ்விற்குப் பெருமை சேர்க்கும் விதமாக 2024 ம் ஆண்டு இந்த எமது இரண்டாவது திருக்குறள் சார்ந்த தகவல் தொகுப்பு நூலை இன்று தமிழ்ச்சமூகத்திற்கும், கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவருக்கும் சமர்ப்பிக்கிறேன். திருக்குறளை உலக அளவில் பாவலாக்கள் செய்யக் கையேடாக இந்நூல் பயன்படும். இந்நூலில் நிகழ்காலத்தில் ஆக்கப்பூர்வமான, உயிர்ப்போடு உலக அளவில் இருக்கும் திருக்குறள் பரப்புரை திட்டங்கள். அமைப்புகள், ஆளுமைகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளது. பலருக்கும் தெரியாத பல்வேறு அரிய, புதிய பயனுள்ள திருக்குறள் தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன். இதில் இணையதள முகவரி, தொடர்பு எண். விரைவுத் தகவல் குறியீடு (QR Code) உள்ளிட்ட விவரங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ஒரு தொழில்முனைவோர். சமூக சிந்தனையாளர், எழுத்தாளர். கணித்தமிழ் ஆர்வலர். திருக்குறள் செயல்பாட்டாளர். திருக்குறள் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளை பெரும் ஈடுபாட்டுடன் 15 ஆண்டுகளுக்கு மேல் செய்துவருபவர்.வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர், வலைத்தமிழை (www.ValaiTamil.com). "வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்", "குறள் வழி" மாத இதழ் ஆகியவற்றை நடத்தி வருகிறார். பதிப்பகம்" (www.eStore.Valai Tamil.com). Thirukural Translations in திருக்குறளுக்கென "வலைத்தமிழ் World Languages நூலின் இணையாசிரியர். வலைத்தமிழ் கல்விக்கழகம்" நிறுவி www.ValaiTamilAcademy.org நடத்திவருபவர். தமிழ் பிறந்தநாள் பாடல் "நீண்ட நீண்ட காலம்" பாடலின் தயாரிப்பாளர் (www.ValaiTamil.com/TamilBarthay), "உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்". "உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்". "திருக்குறள் 2030" உள்ளிட்ட அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர். "Thirukkural for UNESCO" அமைப்பின் குழு உறுப்பினர். "உலகத் தமிழிசைத் தூதர்", "அயலகத் தமிழர் விருது". "திருக்குறள் நெறிச்சுடர் விருது" உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
Be the first to rate this book.