மருந்துகளற்ற வாழ்வியல் முறையை முன்னெடுக்க விரும்பும் அனைவருக்குமான நூல் இது. உடல் மனம் இயங்கும் விதத்தைச் சரியாகப் புரிந்துகொண்டாலே பாதிக்கும் மேற்பட்ட பிரச்சினைகள் காணாமல் போய்விடும்.
அதிதொழில்நுட்ப விரைவுலகில் எத்தனையோ அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவரவர் உடலையும் மனதையும் காத்துக் கொள்ளத்தான் அத்தனை கடினமாக இருக்கிறது.
மிக எளிதுதான் மிகக் கடினம். யாரும் மலை தடுக்கி விழுவதில்லை; கல் தடுக்கித்தானே விழ நேரிடும். அதுபோல பசித்துப் புசிப்பதும், இரவில் நேரத்துக்கு உறங்குவதும் மிக எளிய செயல்கள்தான். ஆனால் செயலாக்கத்தான் அத்தனை கடும் பிரயத்தனம் தேவைப்படுகிறது. திட்டமிட்டு மனத்திடம் கொண்டு எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு உடலையும் மனதையும் பாழ்படுத்தாமல் பக்குவமாகக் கையாள முடிந்தால் அந்த தொடக்கமே உடல் மன ஆரோக்கியம் பெறுவதன் முதல் படியாகும். இது எளிமை; அதுவே வலிமை.
இந்நூலில் உடல், மனத் தொந்தரவுகளுக்கான காரணமும், அதற்கான எளிமையான தீர்வுகளும் கூறப்பட்டுள்ளன. அக்கு ஹீலர் அ.உமர்பாரூக் அவர்களுடனான நேர்காணல் தொகுப்பின் முதல் பாகமிது. ஒருவரின் தொடர்ந்த தேடுதலில் அவருக்கான தீர்வைக் கண்டடையக்கூடும். இந்த நூலும் உங்கள் தேடலின் விளைவாய் உங்கள் கைகளில் கிட்டியிருக்கிறது. வாசித்து வசப்படுத்துங்கள்: ஆனந்தம் பரவட்டும்.
Be the first to rate this book.