இன்றைய உலகில் நோய்களுக்கான மிகப்பெரிய காரணமாகக் கூறப்படுவது கிருமித் தாக்குதல்தான். உலகையே அச்சுறுத்துவதாக நம்பப்படும் வைரஸ்கள் பயப்படும் ஒரே விஷயம் என்ன தெரியுமா? அதுதான் நம் எதிர்ப்பு சக்தி உடலின் எதிர்ப்பு சக்தி சரியாக உன்ள நபர் எவ்வனவு தீவிரமான கிருமித் தாக்குதலில் இருந்தும் தப்பி விட முடியும் என்று கூறுகிறது நுண்ணியிரியல்,
நம் உடலின் எதிர்ப்பு சக்தியை சரியாகப் பராமரித்தோமானால் உடலில் ஏற்படும் சிறிய தொத்தாவுகள் முதல் மிகப்பெரியதாகக் கூறப்படும் நோய்கள் வரை அனைத்தையும் எதிர்கொள்ள முடியும். அவற்றில் இருந்து விடுபட முடியும்.
நோய்க்காரணிகளை இன்றைய அறிவியலாளர்கள் உலகம் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மரபுவழி மருத்துவங்களின் அடிப்படையில் உடலை, அதன் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொள்வதே எளிமையானது இயற்கை நமக்கு அளித்த ஆரோக்கியத்தை நம் ஆயுட்காலம் முழுவதும் பராமரித்துக் கொள்ளும் வழிகளை நாம் தேடலாம். நோயின்றி வாழ நமக்குத் தேவையான எளிமையான வழிகளையும், நம் அன்றாட பழக்கவழக்கங்களை ஆரோக்கியம் பற்றிய புரிதலோடு சீரமைத்துக் கொள்ளும் முறைகளையும் அறிந்து கொள்ள இந்நூல் வழிகாட்டும்.
Be the first to rate this book.